வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தோல்வி....

அன்றொரு நாள் நீண்ட இரவினில்
நீங்காத நினைவுகளோடு
நித்திரை கொள்ள முயற்சித்து
தோற்றுபோய் கொண்டிருந்தேன்
எனை மறந்து கண் அசரும் நேரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் ? நீயா?
சட்டென தூக்கம் களைந்து எழுந்தேன்
அங்கே வெறுமை மட்டுமே எனை ஆட்கொண்டது.
மீண்டும் முயற்சிக்குறேன்
தூங்க அல்ல
உன் நினைவுகளை துறக்க
அதிலும் தோற்றுபோய்கொண்டே இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக