திங்கள், 31 ஜனவரி, 2011

மறு பிறவி

இன்னோர் ஜென்மம் இருப்பின்
எனக்கு மானிடப்பிறவி வேண்டாம்.
கல்லை கடவுளாகவும்
மனிதனை கல்லாகவும் பார்க்கும் இடம் இது.
நட்பு எனும் பெயரில்
நயவஞ்சகர்கள் நடமாடும் பூமி இது.
காதல் என்ற பெயரில்
கயவர்கள் கொண்ட பூலோகம்.
பாசம் என்ற பெயரில்
பசப்பு காட்டும் பாவிகள் உள்ள உலகம்.
இன்னோர் பிறப்பிருப்பின்
இறைவா, எனை கல்லாய், மண்ணாய், காற்றாய்
படைத்திடுவாய் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக