கண்ணும் கருத்துமாக கணிணியை பார்த்து இருந்த என்னை
இந்த கன்னியை பார்க்க வைத்த அழகியே
எங்கே சென்றாயடி ?
அறிவில் பிறந்தவர் மரிப்பதில்லை உன் அழகில் விழுந்தவர் எழுவதில்லை
கண்களால் கைது செய்து என்னை உன் இதய சிறையில் அடைத்து
முத்த சாட்டை எடுத்து என் உடலெங்கும் வீசி இன்ப சித்திரவதை செய்யடி
என் செல்லமே!
கண்களில் ஒளி வீசி என் இதயத்தில் வலி ஏற்படுத்தாதே,
காமம் படர்ந்த கண்களில் காதல் தெரிய வைத்தவள் நீ
காதல் தெரியும் கண்களில் சோகம் தெரிய வைக்காதே
கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் ஒரு சிறிய பிடிப்பாவது
கிடைக்காதா என பார்ப்பது போல்
ஏங்கி தவித்து பார்த்து கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக