புதன், 27 ஜூலை, 2011

அம்மா.....

மழையில் நனைந்து வருபவனை தன் முந்தானை துணியில் துவட்டி விடும் அம்மாவின் ஸ்பரிசம்
ஒரு முறை கூட காதலியின் துப்பட்டாவில் வருவதில்லை !!

வியாழன், 21 ஜூலை, 2011

ரயில் விளையாட்டு.....

முதல் பெட்டியாய் நான், மூன்றாம் பெட்டியாய் நீ இருப்பினும் உன் கால் கொலுசோசை என் காதில் மட்டும் தனியாய் விழும்.
வருடங்கள் பல உருண்டோடி போனாலும்,
இன்றுவரை ரயிலை பார்க்கும்போதெல்லாம் அதனோசை மறைந்து உன் கொலுசோசை மட்டுமே கேட்கிறது !!

வியாழன், 14 ஜூலை, 2011

நினைப்பு

உண்ணும்போது உன் நினைப்பு வந்தால் விரல் கடித்து விடுகிறேன்
உறங்கும்போது உன் நினைப்பு வந்தால் தலையணையை அணைக்கிறேன்
மறந்து விடு என்று நீ சொன்ன வார்த்தையை நினைக்கும்போதெல்லாம்..............

மரணித்தே போகிறேன் !!