ஞாயிறு, 22 டிசம்பர், 2013
மரியாதை !
நீ மற்றவர்க்கு தரும் மரியாதையை பொறுத்தே உனக்கான மரியாதை அளவிடப்படும் - ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமிகள் மார்டினானந்தா
நிம்மதி !
காசு, பணம், கார், பங்களா வந்தா நிம்மதி போகத்தான் செய்யுது - பக்கத்துக்கு வீட்டு காரங்களுக்கு!
நீ இல்லாமல்
எப்பொழுதும் போல் தான் இப்பொழுதும் விடிகின்றது
எனக்கென்னவோ ஏதொரு வித்தியாசமும் இல்லை
ஏனனில்,
நீ என்னோடு மட்டுமே இல்லை
என் மனதில் என்றும் உன் நினைவோடு நான்.
திங்கள், 18 பிப்ரவரி, 2013
குரலோசை!
அம்மாவின் "சின்னவனே "
அத்தையின் "தம்பி"
மனைவியின் "என்னங்க "
நண்பனின் "மச்சி "
இவற்றைவிடவும் உருகிவிட செய்கிறது
மகளின் "அப்பா" என்ற குரலோசை !!
வியாழன், 7 பிப்ரவரி, 2013
புதன், 6 பிப்ரவரி, 2013
வெள்ளி, 18 ஜனவரி, 2013
முயற்ச்சி
முடிவென்பது ஏதுமில்லை இந்த பூலோகத்தில்
முடிவின் முதல் எழுத்தில் முயற்ச்சியினை காண் !
அதில் முன்னேற்றத்தின் படி தெரியும்.
வியாழன், 17 ஜனவரி, 2013
வேண்டாம்!
தேடலாகி தொலைந்துருகி,
காதலாகி கசிந்துருகி,
மோதலாகி பிரிந்துருகி,
ஊடலாகி உள்ளமுருகி, பின்
உடலுருகி மாயும்
இக்காதல் வேண்டாம் !!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)