செவ்வாய், 10 மே, 2011

வேண்டாம்....

உள்ளத்தில் பள்ளம் பறிக்கும் உறவினர் வேண்டாம்
சகோதரனை சுமையாய் என்னும் உடன் பிறப்புகள் வேண்டாம்
ஊருக்கு அப்பால் ஓர் உறைவிடம்
உறு துணையாய் என் உயிர் சுமந்த மனைவி
வாய்க்கரிசி போட நான் பெற்ற செல்வங்கள்
உயிர் தோழி நீ
உற்ற நண்பன் அவன்
இது போதுமெனக்கு
உறவுகள் வேண்டாம் உடன் பிறப்புகள் வேண்டாம்
இதயம் பிழிந்து குருதி குடிக்கும் உறவுகள் வேண்டாம்.